புதுச்சேரி அரசு கேட்டரிங் கல்லூரி முதல்வர் டாக்டர். விஜயநம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாண்டிச்சேரி முருங்கப்பாக்கத்தில் அரசு கல்லூரியான Pondicherry Institute of Hote Management, கடந்த 31 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.
அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள, புதுவை மாநில சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் இந்த அரசு கேட்டரிங் கல்லூரியில் 3 வருடம் BSC (ஹோட்டல், நிர்வாகம்) பட்டப் படிப்பிற்கும், மேலும் ஒன்றரை வருடம் Diploma (Food Production) மற்றும் ஒன்றரை வருடம் Diploma (Food and Beverage Service) பட்டய படிப்பிற்கும் காலியாக உள்ள இடங்களில் நேரடி சேர்க்கை (Spot Admission) 03:08/2022 முதல் நடைபெற உள்ளது.
கல்வித் தகுதி;
BSc பட்டப் படிப்பு : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி (எல்லா பாடப் பிரிவுகளும்) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.
Diploma பட்டயபடிப்பு:
12-ஆம் வகுப்பில் (எல்லா பாடப் பிரிவுகளும்) தேர்ச்சி மட்டும் போதுமானது
வயது வரம்பு
BSc & Diploma : 01/07/2022 அன்று 25 வயது மிகாமல் இருத்தல் அவசியம் (எல்லா பிரிவினரும்)
01/07/2022 அன்று 28 வயது மிகாமல் இருத்தல் அவசியம் (SC. ST பிரிவினர்)
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
0413-2358389,
0413-2353251,
9443258389
கல்லூரியின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ, மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு நேரடி சேர்க்கை பெறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக