புதுச்சேரி அருகே உள்ள பெரம்பை கிராமத்தில் போர் வாட்டர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் -இனிதா தம்பதியினர்.
சுரேஷ் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு லெவின் என்கிற 4 வயது மகனும் ரோகித் என்கிற 3 வயது மகனும் உள்ளனர்.
இதனிடையே இன்று வீட்டின் அருகே விளையாட சென்ற இரண்டு சிறுவர்களும் நீண்ட நேரமாக காணவில்லை என தேடியபோது வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் போர் போடப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற சேற்றில் மயங்கிய நிலையில் இருந்தனர்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது 2 சிறுவர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் போடப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக