ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அன்பழகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..!
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க, புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ஜிப்மர் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று ஜிப்மர் எதிரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது :
ஜிப்மர் வேலை வாய்ப்பு விஷயத்தில் பறிபோகும் நம் மாநில உரிமையை தடுத்து நிறுத்த புதுச்சேரி மாநில அதிமுக நடத்தும் இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனை என்ற நிலை மாறி மெல்ல மெல்ல அழிவு பாதைக்கு ஜிப்பர் மருத்துவமனை சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். இந்த மருத்துவ மனையில் சாதாரண காய்ச்சலுக்கும். தலை வலிக்கும் கூட மருந்துகள் இல்லை. உயிர் காக்கும் பல மருந்துகள் வெளியில் வாங்கக் கூடிய சூழ்நிலையில் நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். தற்போது மருத்துவர்கள். செவிலியர்கள், டெக்னீஷியன்கள், மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு அகில இந்தி அளவில் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படுகிறது.
வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லை. நம் மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வேலை பாதிக்கப்படுகிறது. ஜிப்பர் மருத்துவ' கல்வியில் மொத்தமுள்ள 243 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 54 இடங்கள் அதாவது 26.5 சதவீதம் புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் ஜிப்பர் நிர்வாகம், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.
தற்போது 433 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செவிலியர் படித்துள்ளவர்களுடன் நம் மாணவிகள் போட்டியிடும் நிலை ஏற்படுவதால் நம் மாநிலத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
மருத்துவ கல்வியில் 26.5 சதவீதம் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீதம் இடங்கள் வழங்கினால் நம் மாநிலம் சார்ந்த சுமார் 115 செவிலியர் படிப்பு படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.
குருப்-டி, பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களுக்குக் கூட வட மாநிலத்தை சேர்ந்தவர்களை இங்கு நியமிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ் மொழி பேசும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்குக் கூட வேறு மொழி பேசுபவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழ் பேசும் புதுச்சேரி, தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் புதுச்சேரி மாநிலத்தின் மாநில உரிமை ஜிப்பர் நிர்வாகத்தால் பரிக்கப்படுவதை மாண்புமிகு முதல்வர், துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்கு நாம் ஏற்கனவே கொண்டு சென்றுள்ளோம்.
மீண்டும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு நம்மாநில மக்களின் நலனுக்காக கொண்டுவந்துள்ளோம். இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநரும், மாண்புமிகு முதலமைச்சரும்; மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி நம் மாநிலத்திற்கு ஜிப்மர் வேலை வாய்ப்பில் குறைந்தது 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஜிப்மரில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் பெற்று தரஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது நடைபெறும் செவிலியர் பணி நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிப்மர் நிர்வாகத்தின் சீர்கேடு சரிசெய்யப்படவில்லை என்றால் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கழகத்தின் இடைக்காலப் பொதுச் செய்லாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் அனுமதியோடு அடுத்தக் கட்ட நடவடிக்கையை அதிமுக முன்னெடுக்கும்.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இதுவரை ஒருவர் கூட கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் எங்களது அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீதம் வரலாற்று சிறப்பு மிக்க உள்ஒதுக்கீட்டை வழங்கி இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.
புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால் 5க்கும் மேற்பட்ட அரசு பள்ளி பாணவர்கள் ஜிப்மரில் மருத்துவக் கல்வி பயிலும் சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக தமிழக அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரியிலும் அமுல் படுத்த வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம்,மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாலர், முன்னாள் எம்எல்ஏ நடராசன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவிEX.MC, கணேசன் EX. MC, திருநாவுக்கரசு. மாநில கழக துணைத் தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ,மாநில எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி,மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா. தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல் தாஸ்,குணசேகர், கிருஷ்ணன்,வேலவன், கோபால், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், அன்பு முருகன், பூபதி, குணசேகரன்,சேகர், கமலா, நாகமுத்து, சூர்யா, மாநில மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணைச் செயலாளர்கள் கணேசன்,,அன்பழகன். துணைச்செயலாளர் கணபதி, ,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், பிரகாஷ், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனுவாச பெருமாள், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், யோகனந்தசாமி,மாநில மகளிரணி தலைவி மகேஸ்வரி, துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாலர், முன்னாள் எம்எல்ஏ நடராசன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன் EX. MC, திருநாவுக்கரசு. மாநில கழக துணைத் தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ,மாநில எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா. தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், குணசேகர், கிருஷ்ணன்,, கமல் தாஸ், வேலவன், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், அன்பு முருகன், குணசேகரன்,சேகர், கமலா, நாகமுத்து, சூர்யா, மாநில மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணைச் செயலாளர்,அன்பழகன். துணைச்செயலாளர் கணபதி, ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பிரகாஷ், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனுவாச பெருமாள், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், யோகனந்தசாமி,மாநில மகளிரணி தலைவி மகேஸ்வரி, துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி மாநில இணைச் செயலாளர் சிவக்குமார்,தொகுதி கழக தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார், உட்பட கழகத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார், முன்னாள் பகுதி கழக செயலாளர் ராஜாமணி, கலியபெருமாள், பால்ராஜ்,உட்பட கழகத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக