முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர் நலனில் அக்கறை காட்டாத புதுச்சேரி அரசு..! மாணவர் கூட்டமைப்பு கண்டனம்..!


புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி,புதிய கல்வி கொள்கை,சி.பி.எஸ்.இ.பாடம்,இந்தி மொழி, EWS, மதம், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் திணித்து கல்விக்கூடங்களை காவி கூடங்களாக மாற்றுவதில் காட்டும் அக்கறையை ஒரு துளி கூட மாணவர்களின் கல்வி மேம்பாடு வளர்ச்சி பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அக்கறை காட்டாமல் புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்* .

*புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கண்டனம்*"
----------------------------------------

* புதுச்சேரி மாநிலத்தில் பனிரெண்டாம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்து பல மாதங்கள் ஆகியும் கூட இதனால் வரை மாணவர்களின் சேர்க்கை முழுமை பெறவில்லை .
* அரசு கலைக்கல்லூரி , சட்டம், பொறியியல் போன்ற கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு கலந்தாய்வுகளை நடத்திய சென்டாக் நிர்வாகம் தற்பொழுது மூன்றாவது கலந்தாய்வை நிறுத்தி நேரடியாக இறுதி கலந்தாய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது .
* இதே போல எல்லா மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் கூட தற்போது தான் முதல் கலந்தாய்வு புதுச்சேரி மாநிலத்தில் நடந்தேறி உள்ளது. அதற்குள் மூன்றாவது கலந்தாய்வை நிறுத்தி இறுதி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

* மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட்டணத் தொகையை 5000 ஆக உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூட முடியாத அவலத்தை நிர்வாகம் உருவாக்கியுள்ளது., 
* இந்த கல்வியாண்டு தொடங்கியது முதல் பல பள்ளிகளில் மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத நிலை நீடித்ததை அனைவரும் அறிவோம்.
* இலவச பேருந்து திட்டம் என்பது இதுநாள் வரை ஏட்டளவிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

* மாணவர்களுக்கான மதிய உணவு இந்த கல்வியாண்டு துவங்கி இந்நாள் வரை சுத்தமான சத்தான உணவு இன்றி மாணவர்கள் தவித்து வருவதை அனைவரும் அறிவோம். 
* தாகூர் கலைக் கல்லூரியின் முதல்வர் கடந்த 100 நாட்களாக மாணவர்களின் உரிமைக்காக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார். இது நாள் வரை அரசு தரப்பிலிருந்து அவரோடு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல் அவமதித்து வருகிறது .

* பள்ளிகளில் மாணவிகளுக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை யாரிடம் அளிப்பது என்பது தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக காரைக்கால் பகுதியில் இந்த புகார் அளிப்பதற்கான குழு இது நாள் வரை அமைக்கப்படவில்லை .
 * தற்பொழுது ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கையில் ஒரு மாணவர் இரண்டு மாநிலத்திற்கான சான்றிதழோடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் இருந்துள்ளன. 
* கடந்த வாரம் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மாணவன் ஒருவன் மன உளைச்சலின் காரணமாக தற்கொலையில் ஈடுபடுகிறான் .
* அதே போல காரைக்கால் பகுதியில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் தற்போது வீடு திரும்பி உள்ளார். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகார் இதுநாள் வரை எந்த ஒரு விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை .
* அரசு பள்ளிகளில் ஆர் எஸ் எஸ் பயிற்சி எடுத்த விவரம் ,
*அரசு பள்ளி மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என தடுத்த ஆசிரியர் மீதான விசாரணை கமிட்டி என்னானது என்பது இதனால் வரை தெரியவில்லை.

* பட்டியலிடப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெருவதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி இந்த மாதம் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் சேர்க்கை கல்லூரிகளில் இதனால் வரை முடியவில்லை கல்லூரிகளில் சேர்ந்தால் மட்டும்தான் மாணவர்கள் அந்த தொகையை பெற விண்ணப்பிக்க முடியும், 
* ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்று முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் ,அதற்கான தனி தொகை ஒதுக்கப்பட்டது ஆனால் கடந்த ஓராண்டு காலமாக மாணவர்களின் உதவித்தொகை ஊக்கத்தொகையிலிருந்து அந்த நிதி கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்ற கேள்வியை இந்த நேரத்தில் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது
.* தாகூர் கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் மாணவர் விடுதி புனரமைப்பு என்ற பெயரில் மூடப்பட்டுள்ளது.
 * அதேபோல் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மாமிச உணவு, ரேஷன் போன்றவற்றை அரசு இதனால் வரை பல காரணங்களை காட்டி நிறுத்தி வைத்துள்ளது.
 * மேலும், மகளிர் பாலிடெக்னிக் மூடப்பட்டது மீண்டும் கிராமப் பகுதியில் திறக்கப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்தது பொய் கதை என வெட்ட வெளிச்சமாக்கியது. 
* சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திராநகர் அரசு பள்ளி உள்ளிட்ட பல அரசு பள்ளிகள் ஆட்குறைப்பு என்ற பெயரிலே மூடப்பட்டன .
*சட்டக் கல்லூரியில் பேராசிரியர் இல்லை. * ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள் இல்லை. * மாணவர்களுக்கான விடுதி இல்லை. 
* அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 
* பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி கூட இல்லை .என மாணவர்கள் குற்றம் கூறி வருகிற நிலைகள் 
        இவை எல்லாம் பற்றி கவலைப்படாத புதுச்சேரி அரசை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால் நீதியரசர்கள் முன்னிலையில் அப்பட்டமான பொய்களை கூறும் புதுச்சேரி அரசு

சனாதன ஆர் எஸ் எஸ் வாதிகளின் கொள்கைகளாக இருக்கக்கூடிய இந்தி திணிப்பு, சிபிஎஸ்சி பாட திணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, அரசு பள்ளிகளில் கொண்டுவரும் அரசின் புது திட்டங்களில் (ஜன் ஜட்டியா கவுரவ் திவாஸ் விழா) ஹிந்தியில் பெயரை வைத்து மொழி திணிப்பு, ஆர் எஸ் எஸ் ஓடு தொடர்புள்ள நபர்களை கல்லூரி முதல்வராக்குவது மாணவர் சேர்க்கையில் முற்பட்ட சாதிக்கான இட ஒதுக்கீடு போன்ற அடுக்கடுக்கான சனாதன காவி கூட்டங்களின் அழுக்குகளை கல்விச்சாலைகளில் திணிப்பதில் காட்டும் அக்கறையை மாணவர்களின் வளர்ச்சி, அறிவு மேம்பாட்டுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத அரசாக புதுச்சேரி அரசு திகழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. எதிர்கால புதுச்சேரி மாநிலத்தின் தலைமுறையை சீரழிக்கும் இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கக் கூடியது.

நம்பி வாக்களித்த மக்களையும் எதிர்கால தலைமுறையையும் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் மாநில தலைமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...