புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடாவுமான அனிபால் கென்னடி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீப காலமாக மாண்புமிகு புதுச்சேரி அரசின் முதல்வர் அவர்கள் ,எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீடுபிரச்சினை- மின்துறை தனியார் மயம் -எம்பிசி இட ஒதுக்கீடு பிரச்சனை- உள்ளிட்ட மிக முக்கியமான மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்தவிதமான
தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக் கூடாது என்று நவம்பர் 4ஆம் தேதி அன்றுமாண்புமிகு முதல்வர் அவர்களிடம் திமுக, காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக அதிகாரியினை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது மட்டுமல்லாமல் என் ஆர் காங்கிரஸ்- பிஜேபி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. தமிழகத்தில் திமுக அரசின் முதல்வர் தளபதி மு .க. ஸ்டாலின் அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில்
சொல்லியதோடு நில்லாமல் -மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் ஒருபோதும் இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்படாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் .மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்ச நீதிமன்றத்தில் திமுக மட்டுமல்ல, தமிழக அரசும் மேல்முறையீடு செய்யும் சீராய்வு மனுவினை தாக்கல் செய்யும் எனக் கூறி சமூகநீதிகாவலனாக தன்னை நிலைநிறுத்தி- ஆதிக்க சக்திகளை விரட்டியடிப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார்.
நமது புதுச்சேரி மாநிலம் தமிழகத்தோடு பின்னிப்பிணைந்த மாநிலம் ஆகும். புதுச்சேரி அரசின் நிர்வாகத்துறை சமீப காலமாக வெளியிடும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக அறிவிக்கையில் தொடர்ந்து EWS வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதும் எம்பிசி மக்களை புறக்கணிப்பதும் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அல்லது அமைச்சரவை முடிவின்படிதான் அரசின் நிர்வாகம் அறிவிக்கை வெளியிடுகிறதா ?எனத்தெரியவில்லை. குறிப்பாக புதுச்சேரி அரசின் தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையின் இயக்குனரகம் சார்பில் 14 .11 .22 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தொழில்நுட்ப அலுவலர் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு இரண்டு இடமும்EWS பிரிவினருக்கு இரண்டு இடமும் நிரப்பப்படும் என
வெளியிடப்பட்டுள்ளதுமிகப்பெரிய சமூக அநீதியாகும்.
புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 16 லட்சத்தில் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட -வன்னியர்- மீனவர் -முதலியார் செங்குந்தர்- -கிராமணி-கிருத்துவர்- முஸ்லிம்-உள்ளிட்ட OBCபிரிவினருக்கு இரண்டு இடமும் வெறும் 40 ஆயிரம் பேர் மக்கள் தொகை உள்ள EWS வகுப்பினருக்கு அதே இரண்டு இடமும் ஒதுக்கி இருப்பது எந்த வகை ?சமூக நீதி என்பதனை புதுச்சேரி அரசு விளக்க வேண்டும் .
தொடர்ந்து புதுச்சேரி அரசின்அரசிதழ் பதிவு பெறாத குருப்"பி" பணியிடங்களுக்கு MBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது ,இந்த அமைச்சரவை தலைமைச் செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமைச் செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறேன்.2004 ஆம் ஆண்டு முதல் தான் இட ஒதுக்கீடு உரிமையை எம்பிசி மக்கள் பெற்றார்கள். அதுவும் குறிப்பாக
1996 -2000ஆம் ஆண்டில் அமைந்த திமுக கூட்டணி அரசில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. அதற்குள் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிப்பது நியாமா?பெரும்பான்மை மக்களாகிய வன்னியர் -மீனவர்- பட்டியல் இனத்தவர்- முதலியார் -உள்ளிட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வராகவும் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள பாஜக கூட்டணி அரசு ,அந்த மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை- துரோகம் செய்யாமல் இருந்தால் போதும். இட ஒதுக்கீடு விஷயத்தில் 2012 ஆம் ஆண்டின் முந்தைய நிலை தொடர வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.
EWS-இட ஒதுக்கீட்டை ஒன்றியபாஜக அரசு தான் ஆட்சி செய்யும் மாநிலமான கர்நாடகா மாநிலத்தின் அரசு வேலைவாய்ப்பில் அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாய உத்தரவும்எந்த இடத்திலும் பிறப்பிக்கவில்லை என்பதனை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அரசியல் அமைப்புச்சட்டத்தை திருத்தி, இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் மாடல் ஆட்சியை நடத்தும் தாங்கள் இந்த துரோகத்திற்கு துணை போகலாமா? 2012 இல் எப்படி எம்பிசி- ஓபிசி மக்களுக்கு குரூப் "பி"அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்கள் நிரப்பப்பட்டதோ அதே நிலையை தொடர மறுப்பது ஏன்? தற்பொழுது நடப்பது மக்களுக்கான ஆட்சி இல்லை.இதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் பலிஆடாக மாறக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழைகள் என்பவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 72,000 ரூபாய்வருமானம் உள்ளவர்கள் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் ஏழைகள் என்பவர்கள் 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் என ஒரு புது விதமான கணக்கினை வகுத்துள்ளனர். அந்த கணக்கினை மாநில அரசு அமல்படுத்திட முடியுமா? மாண்புமிகு முதல்வர் அவர்கள்,உடனடியாக நவம்பர் 4 ந்தேதி அன்று அனைத்துக் கட்சி தலைவர்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு இந்த அமைச்சரவை ஆளாக நேரிடும் என திமுக சார்பில் எச்சரிக்கின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக