முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்; அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே ஆட்சியாளர்கள் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாக உறுதியளித்து மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. சிலரின் சுயலாப நோக்கத்தாலும், லஞ்ச லாவண்யத்தாலும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூட புதுச்சேரி அரசின் ஒதுக்கீடாக பெறாதது பெரும் வெட்கக்கேடான விஷயம்.

இந்நிலையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் பிச்சையிடுவதுபோல மருத்துவக்கல்லூரி இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டும் குறைவான இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்கியுள்ளனர். மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர். மாணவர்களின் நலனுக்காக காமராஜர் போன்ற பல தலைவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரும் போராட்டத்தை சந்தித்து நற்பெயர் பெற்றுள்ளனர். அவர்களின் பெயரை பயன்படுத்தி புதுச்சேரியில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாணவ சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவது அநீதி, அக்கிரமத்தின் உச்சம்.

புதுச்சேரியில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் ஒன்றையும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற உச்சகட்ட அதிகாரம் படைத்தவர் அனுமதியளித்து தனியார் மருத்துவ கல்லூரி மீதான தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். இதேநிலை நீடித்தால் வரும்காலத்தில் புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரியிலும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள் கிடைக்காது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவக்கல்வி என்ற கனவு கானல்நீராகவே மாறிவிடும்.

வார்த்தை ஜாலங்களாலும், வாழ்க்கை நாடகத்தாலும் மக்களையும், மாணவர்களையும் நீண்டகாலம் ஏமாற்றிவிட முடியாது. புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் வஞ்சிக்கப்பட்டால் அதை அதிமுக அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது. புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக அவர்களோடு வீதியில் இறங்கி போராடவும் தயங்காது. ஆட்சியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து, புதுச்சேரி மாநில மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...