முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல் உறுப்புகளை தானம் செய்த புகைப்பட நிருபர்;குவியும் பாராட்டு..!

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள புகைப்பட நிருபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் use

புதுச்சேரி நமது முரசு நாளிதழில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் பெருமாள். சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரி பத்திரிக்கை துறையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வரும் இவர், தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் முன்மாதிரியாக தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இவரின் செயலை பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,
வாழும்போது முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் நாம், வாழ்க்கை முடிந்த பின்னரும் நமது உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போகாமல், நமது உடல் உறுப்புகள் மூலம் உயிருக்காக போராடும் சிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
விபத்துகள் மற்றும் அதனால் உடலில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பு சேதம் அடைந்து உயிருக்கு போராடுபவர்கள் அடிக்கடி சந்தித்து வரும் சூழ்நிலையில், சிலர் உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழக்கும் சம்பவங்கள் வருத்தமடைய செய்கின்றன. உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவர்களது வாழ்வில் ஒளியை ஏற்றலாம் என நம்பிக்கை தெரிவித்த பெருமாள், உடல் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைந்த அளவே உள்ளதால்,நிருபராகிய நான் முன்மாதிரியாக எனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளேன் என தெரிவித்தார்.

கருத்துகள்