புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்,
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ததில் புதுவை மாநிலத்தை சாராத வழக்கறிஞர்களை, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவரும், வழக்கறிஞர் சங்கத்திற்கும், மாநில வழக்கறிஞர்ரகளுக்கும் தொடர்ந்து எதிராக செயல்பட்டு வரும் அரசின் சட்டத்துறை செயலாளர் மீது புதுவை அரசு உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை
பணிமாற்றம் செய்ய வேண்டும்,மேலும் வழக்குகளுக்கு உரியதீர்வு காணாமல் காலதாமதப்படுத்தி வழக்காளிகளுக்கும், வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியை ( Additional Motor Accident Clamis Tribunal Judge) மாற்றக் கோரியும் நாளை ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக