பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நரிக்குறவர் காலனியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது..!
பாஜக பட்டியல் அணி சார்பில் திருபுவனை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் மாநில தலைவர் தமிழ்மாறன் கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமரின் திட்டங்களை பெறுவது பற்றியும் கலந்துரையாடினார்
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பாக, திருபுவனை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலணியில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,பட்டியிலன மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து நரிக்குறவர் மக்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும், அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்றும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்படும் தவணை தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வீரப்பன், மாநில பொதுச் செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக