முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாராயணசாமியால் காங்கிரஸ் கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கும்..! அதிமுக விமர்சனம்..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 

நம் நாட்டை அதிக ஆண்டு ஆட்சி செய்த தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தேசிய அளவில் பொறுப்புகளையும், மத்தியில் இணை அமைச்சராகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு நாராயணசாமி அவர்கள் ஒரே பிரச்சனையில் தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டையும், மாநில அளவில் நேர் எதிரான கருத்தையும் கொண்டு காங்கிரஸ் கட்சி கொள்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

 மத்தியில் 2014 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய இணையமைச்சராக நாராயணசாமி அவர்கள் இருந்தபோது முற்படுத்தப்பட்ட பிரிவினரில் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கு 10 சதவீதமான இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டுவரப்பட்டது.

 காங்கிரஸ் ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிஜேபி ஆட்சியில் இதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

 இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் சட்டம் செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது அந்த தீர்ப்பை ஆதரித்து முதன் முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது இந்த சட்டத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் திடீரென்று புதுச்சேரி மாநிலத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து தற்பொழுது பேசி வருவது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 இந்த சட்டத்தை எதிர்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக தனது கட்சியின் கொள்கை முடிவையே காற்றில் பறக்கவிட்டு இந்த சட்டத்தை தற்பொழுது திரு நாராயணசாமி அவர்கள் எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வது வியப்பாக உள்ளது.

 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் திமுக,காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முதலமைச்சராக திரு நாராயணசாமி அவர்கள் இருந்தபோது மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் முற்படுத்தப்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை முதன் முதலில் இந்திய அளவில் அமல்படுத்தியவர் திரு நாராயணசாமி ஆவார். அவரது காலத்தில் தீயணைப்பு பிரிவில் பணிக்கு ஆட்கள் எடுக்கும் பொழுது முற்படுத்தப்பட்டவர்களில் ஏழ்மையானவர்களுக்கு 10% இடத்தை அளிக்கும் நியமன விதியை திருத்தம் கொண்டு வந்தவர் திரு நாராயணசாமி அவர்கள் ஆவார். ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் எந்த ஒரு மக்கள் விரோத திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தாமல் அதை அவ்வப்பொழுது அமுல்படுத்தி விட்டு தற்பொழுது ஆட்சியில் இல்லாத போது அதே பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். மாநிலத்துக்கு மாநிலம் கம்யூனிஸ்ட் கட்சி போன்று ஒரு நிலைப்பாட்டை பல்வேறு பிரச்சனைகளில் எடுக்கும் பொழுது அந்த கட்சி தேசிய அந்தஸ்து என்ற உரிமையை இழந்தது.அதே நிலை காங்கிரஸ்க்கும் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் ஏற்படுத்துவார் போல் இருக்கிறது.

 இந்த சட்டத்தின் மூலம் ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் பயன்படும் எந்த பிரிவு மக்களுக்கும் பாதிப்பு இல்லாத சூழ்நிலையில் மக்களை குழப்பும் விதத்தில் திமுகவை பின்பற்றி தனது கொள்கையை காற்றில் பறக்க விட்டு காங்கிரசும் எதிர்க்கின்றன.

 மத்திய பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ள நிலையில் மக்களை நீட் தேர்வு போன்று திசை திருப்புகின்ற நோக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

 மத்திய பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பது என்பது அவர்களது கட்சியின் கொள்கை முடிவு. திராவிட முன்னேற்றக் கழகத்தை பின் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக இந்த சட்டத்தை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டுமென திரு ஓபிஎஸ் அவர்கள் கூறியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி டிமாக அவர் செயல்பட்டு வருகிறார் என எங்களது கழகத்தின் இடைக்காலப்பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் குற்றச்சாட்டு உண்மையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...