திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வேல்முருகன் நகர் மக்களுக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை, புதுச்சேரி திமுகவினர் அனைத்து தொகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வேல்முருகன் நகரில், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் அருண் ( எ) சுப்பிரமணியன் மற்றும் கிளை செயலாளர் மூர்த்தி ஆகியோர் ஏற்பாடில் மக்களுக்கு இலவச சக்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகுதியின் பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளார் சிவா எம்எல்ஏ கலந்து கொண்டு, மக்களுக்கு இலவச சக்கரை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக