கண்டக்டர் தோட்டம் அரசு குடியிருப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி நகர பொலிவுறு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்டக்டர் தோட்டம்-பிரியதர்ஷினி நகர் அரசு குடியிருப்பில் புதிய குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அமைப்பது, புதிய தரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, அதிகாரிகளுடன் சென்று புணரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக