CleanHub மற்றும் Recity Network, DERMA E சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை அங்கி வழங்கப்பட்டது.
CleanHub மற்றும் Recity Network, DERMA E உடன் இணைந்து, புதுச்சேரியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு மழை அங்கி (Raincoat) வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் மழைக்காலத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி நகராட்சி மற்றும் ஸ்வச்சத்தாவில் பணிபுரியும் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு ரைன் கோட்டுகளை கிளீன் ஹப், டெர்மா இ, மற்றும் ரீசிட்டி நெட்வொர்க் இணைந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கியது. துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், மழைகாலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ரைன் கோட்டுகள் வழங்கப்பட்டது. பணியிடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவை குறித்தும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வை ரெசிட்டி நெட்வொர்க் நடத்தியது.
இந்த நிகழ்வில் பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் எஸ்.சிவக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரைன் கோட்டுகளை வழங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் (MHO) டாக்டர். துளசிராமன், பாண்டிச்சேரி ஸ்வச்சதா கார்ப்பரேஷனின் பொது மேலாளர் மற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள், ரீசிட்டி நெட்வொர்க் உறுப்பினர்கள், கிளீன்ஹப் மற்றும் டெர்மா-இ நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக