முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்..

அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்ராயப்பேட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையிலான இலவச மருத்துவ முகாம் இன்று உப்பளம் சட்டமன்ற தொகுதி திப்ராயப்பேட்டையில் உள்ள சத்யாலயம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

இந்த மருத்துவ முகாமில்
 பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம்,கண் மருத்துவம்,தோல் சிகிச்சை பிரிவு, இதய நோய், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பியல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சர்க்கரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,மாநில கழக துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் குணாளன், முன்னாள் நகர செயலாளர் ஜெயசிங் ராஜா, உப்பளம் தொகுதி கழக செயலாளர் துரை,வார்டு செயலாளர்கள் செல்வம், அன்தூவான் மற்றும் ராஜா, சுந்தரலிங்கம், தணிகாசலம்,ஜான், ஜெரால்டு,வினோத், லோகநாதன், மணி, கரிகாலன் கனகராஜ் சுகுமார், சக்திவேல், ராஜசேகர், விஜய், வாழுமுனி, அருண், விக்னேஷ், சரத், ரமணன், சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்