முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொள்ளைப்புற நியமனம்! ஆளுநரை கேள்வி கேட்கும் சுவாமிநாதன்.!

மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரியில் , அனைத்து பணி நியமனமும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும் என்று கூறும் மாண்புமிகு புதுவை துணைநிலை ஆளுநரும் தலைமைச் செயலரும் கொள்ளைபுறமாக அரசு உதவி வழக்கறிஞர் பணி நியமனம் செய்து புதுச்சேரி மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குவது நியாயமா? புதுவை அரசு தனக்காக வாதிட சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யும் போது, புதுவை சட்டத்துறை பணி நியமன விதிகள் படியே, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் நிரப்புவார்கள் அதில் உள்ள பதவிகள், 1.Government pleader, 2.Government pleader (CAT)3.Additional Government pleader, 4.public procecuter5. Additional public prosecutor6.Government Advocate7.special Government pleader.இது மட்டும்தான் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரப்ப பட வேண்டிய பதவி. ஆனால் சட்டத்துக்கு முரணாக புதுவை கவர்னர் புதிதாக To Assitting Goverment pleader என ஒரு பதவி உருவாக்கி அதில் ஒருவரை வைத்துள்ளனர். அந்த பதவி சட்டவிதிகளில் இல்லை, அந்த நபருக்கும் எந்த ஒரு நேர்முக தேர்வும் செயயப்பட வில்லை. ஆளுநர் போட்ட ஒரு கையெழுத்து கொல்லைப்புறமாக புதுவை மக்களின் வரி பணம் ஒரு தனி நபருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற அரசு வழக்கறிஞர்கள் முறையான தேர்வு நடத்தி நியமிக்கப்படுகிறார்களா? அல்லது அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நியமிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம்.

போலி மருந்து விவகாரத்தில் ஆளுநர் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் குற்றவாளிகளின் சிறையை நீட்டிக்க வாதிக்க திறமையற்ற அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தத் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்ற கேள்விகளோடு, ஏழை எளிய இளைஞர்களின் வேலைவாய்ப்பு வயது தளர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மட்டும் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களா அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ற கேள்வியோடு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலருக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென கொல்லைப்புறமான பணி நியமனம் செய்வது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்புகிறோம். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தீர்ப்பாயம் புதுச்சேரி நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சமீப காலமாக எந்தெந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதனையும் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.மேலும் புதுச்சேரி அரசின் அவசர காலத்தில் 90 நாட்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்தம் போட்ட ஒப்பந்த ஊழியர்களை போலித்தனமாக 90 நாட்களுக்கு ஒரு முறை என ஆணையை புதுப்பித்து வழங்கி அவர்களது வயது கடந்து போன நிலையில் கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்டவர்கள் என்ற வலி நிறைந்த வார்த்தைகளால் புறந்தள்ளுவது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியை முன் வைக்கிறோம், தங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...