புதுச்சேரி தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் தொழிலாளர் துறை வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 1.00 மணி வரை Bright Brothers, Asian Paints, Lucas TVS Thriruvandarkoil, Manatec, Fastenex, Straive, Sterile Gene, JKAM Aerofil Pvt.Ltd, ஆகிய தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணி இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டுள்ளது.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக பொறியல் (Engineering), பட்டயபடிப்பு (Diploma), ITI, கலை மற்றும் அறிவியல் (Arts and Science) மற்றும் கணினி பொறியாளர்கள் (Computer Science Engineering) படித்தவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தற்குறிப்பு (Resume) மற்றும் கல்வி தகுதிக்கான உண்மைநகல் சான்றிதழ்களுடன் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் துறை வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 1.00 மணி வரை நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக