புதுச்சேரியை சார்ந்த BM இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில்,இயக்குனர் முருகசாமி இயக்கத்தில் லிசி அன்டோனி, அருண் குமார் உள்ளிட்ட முன்னணி திரை கலைஞர்கள் நடித்துள்ள குயிலி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜோ ஸ்மித் இசையில், பாடலாசிரியர் சினேகன் வரிகளில் உருவான" நா பத்து மாசம்" என்ற பாடலை பிரபல திரைப்பட பாடகி வைக்கோம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் Zee Music South என்ற youtube தளம் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி சுமார் 15 லட்சம் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
https://bit.ly/3Hq0bD2
தற்போது வேட்டவலம் ராமமூர்த்தி வரிகளில், பிரபல திரைப்பட பாடகர் அந்தோணி தாசன் பாடிய "மது அது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன் குயிலி பட குழுவை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குயிலி திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


கருத்துகள்
கருத்துரையிடுக