முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராம அலுவலர் பணி: மாணவர் கூட்டமைப்பு புகார்

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்,

புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த தங்களின் துறை சார்ந்த பணி நியமனங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதேவேளையில், அரசு பணி என்பது கனவாகிப் போன புதுச்சேரி மாநிலத்தில் தாங்கள் எடுக்கும் முயற்சி வேலைவாய்ப்பில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்
தாங்கள் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மற்றும் அறிவிக்க உள்ள துணை தாசில்தார் உள்ளிட்ட பணி நியமனங்கள் தொடர்பாக பணியிடங்களுக்கான நியமன விதிகளில் மாற்றங்கள் செய்து கடந்த 13-12-2024 ஆம் தேதி தங்களது துறையால் வரைவு பணி நியமன விதிகள் வரைவு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகள்/கருத்துக்கள் கோரப்பட்டிருந்தது. அரசுப் பணியை
இலக்காகக் கொண்ட இளைஞர்கள் வெளியிடப்பட்ட வரைவு நியமன விதிகளில் குறிப்பிடப்பட்ட தகுதிகளுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து வந்தனர் 
ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தற்போது வரை வரைவு நியமன விதிகள் இறுதி செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
 இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தங்களின் துறையின் மூலமாக வெளியிடப்பட்ட வரைவு நியமன விதிகளில் கிராம நிர்வாக அதிகாரி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான கல்வி தகுதியில் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயம் என குறிப்பிடப் படவில்லை ஆனால் துறையின் மூலமாக வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் மூன்று மற்றும் ஆறு மாத கணினி படிப்புச் சான்றிதழ் அவசியமென உள்ளது
தற்போதைய ஆட்சேர்ப்பு அறிவிப்பானை 2015 பணி நியமன விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரைவு நியமன விதிகளை வெளியிட்ட தங்களது தலைமையிலான வருவாய்த்துறை அதனை மாண்புமிகு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிடாமல் 2015 நியமன விதிகளை பின்பற்றி ஆட்சேர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வியை எமது அமைப்பு முன்வைக்கிறது. அவ்வாறு நியமன விதிகளை இறுதி செய்யும் பணியை தொடர முடியவில்லை என்றால் எதற்காக ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்ற கேள்வியையும் முன் வைக்கிறோம்.
 இம்மாநிலத்தில் நிரப்பப்படும் இதர அரசுப் பதவிகளான அசிஸ்டன்ட், எஸ்.ஐ, துணை தாசில்தார் மற்றும் யு.டி.சி, எல்.டி.சி உள்ளிட்ட எந்த பணி நியமனங்களிலும் கட்டாய கணினி சான்றிதழ் கேட்காத சூழ்நிலையில் இப்பதவிகளுக்கு கட்டாயம் என கூறியிருப்பது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் முன் வைக்கிறோம்.  
தேர்வு நடைமுறைகளில் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு,புதிய விதிக்கு ஆட்சேபனைகள் கோரப்பட்டு அதன் காலக்கெடு முடிந்தும் பழைய நியமன விதியை கடைபிடிப்பது ஒருவித அலட்சிய செயலாகாதா? , அதுவும் 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் புதிய நியமன விதியை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி இச்செயலை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.  
அப்படியெனில் புதிய நியமன விதிகள் யாருக்கானது? அடுத்த பணி நியமனம் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து வரும்? இந்த பணி நியமனங்களை பழைய விதிப்படி முடித்துவிட்டு, புதிய விதியை வெளியிடுவது கேலிக்குரியது ஆகிவிடாதா? .
கணனி அறிவை சோதிக்க வினாக்களும் தகுதித் தேர்வும் இருக்கும்போது சான்றிதழ் கட்டாயம் ஏன்?
ஆட்சேபனை கோரப்பட்ட வரைவு நியமன அறிக்கையின் போது இத்தகவலை தங்கள் தலைமையிலான துறை வெளியிட்டிருந்தால் கணினி சான்றிதழ் இல்லாத பட்டதாரிகள் இப்பணிக்காக பயிற்சி எடுத்திப்பார்கள். ஆனால் அரசின் ஆட்சேபனை கோரிய அறிக்கையில் கணினி சான்றிதழ் குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக வேலைவாய்ப்பை இழந்துள்ள இளைஞர்கள் கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு பயிற்சி மையங்களில் போட்டித்தேர்வு பயிற்சி மட்டும் எடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்ற அவலநிலையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும் கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், நீதிமன்றத்தின் மூலம் கணவரை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயதுத் தளர்வு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் MBC, OBC,EBC,BCM உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்த இதுபோன்ற பெண்களுக்கு இந்த வயது தளர்வு மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி தங்கள் முன் வைக்கிறோம், சுகாதாரத் துறையின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு நிரப்பப்பட்ட பணி நியமனங்களில் இச்சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது மேலும் 2015ல் நிரப்பப்பட்ட பல துறை பணி நியமனங்களில் மூன்றாண்டு வயதுத் தளர்வு பாதிக்கப்பட்ட இப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் துறையின் மூலமாக நிரப்பப்படும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் பணி நியமனங்களில் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் இச்சமூக பெண்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
EWS இட ஒதுக்கீடு 31.01.2019 முதல் தான் புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது இத்தேதிக்கு முன்பாக உருவான காலிப் பணியிடங்களில் EWS இட ஒதுக்கீடு உரிமைகளை கோர முடியாது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் தங்களது ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையில் இது தொடர்பாக ஆய்வு நடத்தி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். கடந்த 2015 ஆம் ஆண்டு காலத்திலிருந்து காலியாக இருந்த பணி நியமனங்களில் 10% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் முழுமையாக வழங்காமல் 2019க்கு பின்பாக உருவான காலிப் பணியிடங்களில் 10% இட ஒதுக்கீட்டை மட்டுமே அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்துகிறோம். நீண்ட நாட்களாக அரசு பணி நியமனமே இல்லாமல் இருந்த புதுச்சேரி மாநிலத்தில் "C' பிரிவில் பணி நியமனம் தங்கள் துறையில் நடக்க உள்ளது இந்த பணி நியமனத்தில் இரண்டு ஆண்டு காலம் வயது தளர்வு வழங்கி உதவினால் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக பணி நியமனமே இல்லாமல் காத்திருக்கும் ஏழை இளைஞர்களுக்கு பணிக்கான தேர்வில் பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கும் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 
மேலும் தேர்வுக்கான பாட முறைகளை அறிவித்துள்ள தாங்கள் அதில் எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பதை குறிப்பிடாமல் 100க்கு 100 என்று குறிப்பிட்டு இருப்பது பல்வேறு துறைகளில் பயின்று தேர்வு எழுத உள்ள தேர்வாளர்களுக்கு மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கும் மேலும் இதுபோன்ற நடைமுறையை எந்த ஒரு மாநிலத்திலும் கடைபிடித்தது இல்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 
எனவே மேற்கூறிய எமது அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து சமவாய்ப்புகளை உறுதுசெய்து சமமான நியாயமான தேர்வினை நடத்தி தகுதியானவர்களை தங்களது துறைக்கு தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...