இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் கௌசிகன் மற்றும் செயலாளர் சஞ்சய் சேகரன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிறப்பிட வேண்டும், மூடப்பட்ட பஞ்சாலைகள், சக்கரை ஆலைகளை புனரமைத்து மீண்டும் இயக்கிட வேண்டும் மேலும் புதிய ஐடி, ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல இளைஞர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவற்றை பற்றியெல்லாம் சற்றும் கவனம் கொள்ளாமல் சொற்ப அரசு காலிப்பணியிடங்களை மட்டும் நிரப்பிவிட்டு சாதனை புரிந்துவிட்டதாக 2024ம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பொய்களை மக்கள் புறந்தள்ளி என்.ஆர் - பாஜக கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக அளித்தனர். மேலும் என்.ஆர் - பாஜக கூட்டணியின் தேர்தல் கால வாக்குறுதியான ஆண்டுக்கு 50000 பேருக்கு வேலைவாய்ப்புகள் என்பது மாபெரும் பொய்பிரச்சாரம் என்பதை இளைஞர்கள், மக்கள் புரிந்துகொண்டுள்ளதால் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் புதுச்சேரி முதலமைச்சர் தோல்வி பயத்தில் ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க புதுச்சேரி மாநில படித்த இளைஞர்கள் மீது பழி போடும் விதமாக வெளி மாநிலம், நாடுகளுக்கு சென்று வேலை செய்ய இளைஞர்கள் தயாராக இல்லை, வேலைக்காக காத்திருக்காமல் மாடுகள் வளர்க்க வேண்டும் என்பது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்திய தேசத்தின் பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து இந்திய தேசத்தின் படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சி செய்ததை போல அதே பாணியில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சின் பேச்சை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பு இருப்பதை தெரிந்துகொண்டு சூழ்நிலையை சாமர்த்தியமாக கையாள்வதாக நினைத்து நிறைய அரசு விழா மேடைகளில் தொடர்ந்து மக்கள் மீதும், தொழிலாளர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் குறை கூறுவதை வாடிக்கையாக செய்து வருகிறார். வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இளைஞர் நலனில் தோல்வி உள்ளிட்ட அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்துள்ள என.ஆர் - பாஜக கூட்டணி அரசு அவற்றையெல்லாம் முடிமறைக்க பழிகளை முழுவதும் மக்கள் மீதும், இளைஞர்கள் மீதும் பழி போடுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை முதலமைச்சரும், அமைச்சர்களும் புரிந்துகொண்டு பேசாமல் இவ்வாறான பிற்போக்குதனமான கருத்துக்களை மீண்டும் பதிவு செய்தால் மிக கடுமையான போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இவ்வாறான பொய்களை சொல்லி, ஏமாற்றி ஆட்சியை பிடிக்க நினைக்கும் என்.ஆர் - பாஜக கூட்டணிக்கு தக்க பாடத்தை புகட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கன்றோம் என குறிப்பட்டுள்ளது.

.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக