முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் ரங்கசாமிக்கு, முற்போக்கு மாணவர் கழகம் கண்டனம்.!

விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தமிழ்வாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் கறவை மாடு வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டலாம் என்று பரிந்துரைத்துள்ளார். முதல்வரின் இத்தகைய அறிவிப்பு புதுச்சேரியின் கல்வி கட்டமைப்பு மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தும் தாக்குதல்களை மூடி மறைக்கும் வேலையாகும்.உயர்கல்வியில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசு திணித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை என்பது மூன்று ,ஐந்து,எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என்று தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை திணிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் இருந்து பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தலித் ,பழங்குடியின சமூகங்களை சார்ந்த மாணவர்களை நுழைய விடாமலும் நுழைந்தவர்களை வடிகட்ட துடிக்கும் பாஜகவின் சதி திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியுள்ளார்.

கல்வியின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசுவது புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஒன்றிய பாஜக அரசின் இந்த சதி திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் கல்வி கற்றால் வேலைவாய்ப்பு பெற முடியாது வேண்டுமானால் மாடு மேய்த்து பிழைப்பு நடத்துங்கள் முதல்வர் ரங்கசாமி அவர்கள் பரிந்துரைப்பது சனாதன சிந்தனையே ஆகும்.புதுச்சேரி மாநிலத்தில் படித்து பட்டம் பெற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் இத்தகைய அவல நிலை ஏற்பட்டதற்கு புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும்,அதற்கு தலைமையேற்றுள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வேலை இல்லா திண்டாட்டத்தை கருத்தில் கொண்டு அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் மீது பழியை போடும் வேலையில் முதல்வர் இறங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.முதல்வரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு கல்வியின் மீதான சமூகத்தின் ஈடுபாட்டை மடைமாற்றி கல்வி அறிவற்ற, பகுத்தறிவற்ற, ஏற்றத்தாழ்வுடன் கூடிய பண்டைய சனாதன சமூகத்திற்கு புதுச்சேரி மக்களை பலவந்தமாக இழுத்து செல்லும் முயற்சியாகும்.பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த பின்னர் புதுவை மாநிலம் முழுவதும் ரெஸ்ட்ரோபார்கள், மதுபான தொழிற்சாலைகள் திறப்பதிலுமே கவனம் செலுத்துகிறார். புதுச்சேரி மக்களின் கல்வி வேலை வாய்ப்பு சுகாதாரம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி மாடு,மாடு வளர்ப்பு என்று சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் முதல்வர் ரங்கசாமி அவர்களை விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

முதல்வரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர் இளைஞர் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...