முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியில் சுவாமி வீதியுலாவிற்கு அனுமதி மறுப்பு.!

புதுச்சேரியில் அனுமன் ஜெயந்தி வீதி உலாவிற்கு அனுமதி மறுத்த கோவில் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் ஸ்ரீ முத்தலாய் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஊர் மக்கள் சார்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுமன் உற்சவ சிலை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் உற்சவர் வீதி உலா நடைபெறும் என அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. கோவில் அதிகாரி மற்றும் பொதுமக்கள் அழைப்பு விடுவதாக பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அரசு அறிவிப்பின்படி அனுமன் ஜெயந்தி வீதி உலா நடைபெறாது என கோவில் அதிகாரி தன்னிச்சையாக பெயர் பலகையில் எழுதி வைத்ததுடன், காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் இன்று காலை முதல் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை முடிந்த நிலையில், கோவில் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை அழித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்காமல், வீதி உலா மறுக்கப்படுவதற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...