முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : முன்னால் எம்எல்ஏ கண்டனம்.!

புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் வித்தியாசமாக இருந்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருப்பதற்காகவே புதுச்சேரியை விரும்பி வருகை தந்தனர். புதுச்சேரிக்கு என்று தனித்தன்மை இருந்தது. தற்போது, அதை சிதைக்கும் பொருட்டு முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஏழை மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூலித் தொழிலாளியாகவும், தனியாரிலும் வேலை செய்துக் கொண்டு பிரதான வாகனமாக டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர். 

தற்போது அறிவித்துள்ள புத்தாண்டு பரிசான பெட்ரோல் விலை உயர்வால் அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சிந்தனை உடைய அரசு தொடர்ந்து அனைத்து தொழிற்சாலைகளையும் மூடியது. பெரிய நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக்கி சுமார் 50,000க்கு மேற்பட்டவர்கள் வெளி மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தனர். பிரதமர் மோடி அவர்கள் பெஸ்ட் புதுச்சேரி கனவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மோசமான புதுச்சேரியாக மாற்றிவிட்டார். இதற்கு வருகின்ற தேர்தல் ஒரு தீர்வாக அமையும்.

 புத்தாண்டில் மக்கள் முன்னேற அரசு புதிய திட்டங்கள், வேலை வாய்ப்பு வழங்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக, மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், புத்தாண்டு பரிசாக வாட் வரியை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திருப்பது புதுச்சேரி மக்கள் சார்பாக கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம். பெட்ரோல், டீசல் உயர்வை மறு பரிசினை செய்ய வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தொடர்ந்து இலவசத்தை மட்டுமே நம்பி அரசாங்க நடத்தும் ஒரே அரசு புதுவை அரசு. வாழ்வாதாரத்தை, கட்டமைப்பை, தொழில்துறையை முன்னேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் மீது அக்கறையும் இல்லை. புதிய மாற்றத்திற்காக தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 

ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்தை சீரழித்தது. அதே வழியை பின்பற்றி வரிகளை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கும் அரசாக தற்போது புதுவை அரசை மாற்றிவிட்டார். புதுச்சேரியில் லட்சக்கணக்கான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டு வாடகை, மின்சார கட்டணம், குப்பை வரி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் தற்பொழுது பெட்ரோல் வரியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் கூடுதலாக செலவழிக்க கூடிய நிலையை உருவாக்கி விட்டனர்.
மேலும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஏற்றியிருப்பது, புதுச்சேரி மாநிலம் தனித்தன்மையை இழந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மீது, அரசு வரி என்ற பெயரில் பொருளாதார சுமையை ஏற்றி சிறிதளவு இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெட்ரோல் வரிக்குப் பதிலாக புதுச்சேரியில் மது கடைகளுக்கு கூடுதல் வரி விதிக்காமல், மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு வரி போட்டியிருப்பது, சர்வாதிகார போக்கை காட்டுகிறது. 

புதுச்சேரி மாநிலத்தை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. இதற்காக தனித்தன்மை உண்டு. இங்கே இயற்கை வளங்கள் இல்லை. மக்கள் சொந்தமாக தொழில் தொடங்க எந்த விதமான மூலப்பொருளும் இல்லை. இதை உணராத அரசாங்கம் பிற மாநிலங்களை காரணம் காட்டி இனியும் ஏமாற்ற வேண்டாம். பிரதமர் அவர்கள் சொன்ன பெஸ்ட் புதுச்சேரியை அவருக்கு எதிராக முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு கொண்டு வருகிறார். புயல் நிவாரணமாக 5000 ரூபாய் அறிவித்துவிட்டு மீண்டும் வரி என்ற பெயரில் அவர்களிடமே வசூல் செய்வதை மக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...