புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், இன்று மேதகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாகGanja, Ganja Oil, Ganja Green, OG (Costly Ganja), LSD (Stamp) Meth(Crystal), Meth (Powder), MDMA(Ecstacy/Molly), Heroin (Powder), Cocaine(Coke/Crack) Ketamine உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற போதைப் பொருட்கள் குறிப்பாக பப், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, தங்குதடையின்றி போதைப் பொருள் விற்பனையால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது நிகழ்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு குறைந்த காலத்திலேயே அதிகப்படியான வருமான பணத்தை பெறுவதால் அவர்கள் காவல்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் தங்களது செல்வாக்கை குறுக்கு வழியில் பெறும் பணத்தின் மூலம் பயன்படுத்துகின்றனர். புதுச்சேரி காவல் துறையால் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், புதுச்சேரி மாநிலம் என்பது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கேந்திரமாக மாறி
மேற்கூறிய பல்வேறு போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் புதுச்சேரி அல்ல. இந்நிலையில் இவர்களுக்கு எங்கிருந்து இது போன்ற போதைப் பொருட்கள் வருகின்றது என காவல் துறை விசாரணை செய்வதில்லை. போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இணைந்து விற்பனை செய்கின்றனர். தெருவெல்லாம் கஞ்சா பொட்டலங்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றது. கஞ்சா விற்பனையை தடுக்கக் கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சுற்றுலா என்ற பெயரில் பெண்கள் சம்பந்தமாக கலாச்சார சீரழிவு நடந்து வருகின்றது. தெருவெங்கும் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, இரவு மூன்று மணிவரை அருவருக்கத்தக்க நடனங்கள் நடத்தப்படுகின்றது, புதுச்சேரியை ஆளும் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அரசாக இல்லை. தினசரி ஏதோ அரசு நிர்வாகம் நடக்கின்றது என்ற நிலையில் ஆட்சியாளர்களின் செயல்பாடு இருக்கின்றது.
புதுச்சேரியில் சமூக, சமுதாய சீரழிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு இவற்றில் அரசு உரிய கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நிடித்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மாநிலமாக மாறும்.
கடந்த வாரம் போதைப்பொருள் உபயோகிக்கும் நபர்களால் அட்டவணை இனத்தை சேர்ந்த ஒன்பது வயது ஆர்த்தி என்ற சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நெஞ்சை பதறவைக்கும் செயலாகும். இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை இச்செயல் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்விற்கு பிறகும் ஆளும் அரசு போதைப் பொருட்கள் தடுப்பு விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தாங்கள் அரசுக்கு துணை நிலை ஆளுநர் என்ற அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவுகளை அமுல்படுத்தாமலும், அலட்சியத்துடனும் செயல்படும் எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கையை உடனடியாக தாங்கள் எடுக்க வேண்டும்.
இரவு இரண்டு, மூன்று மணிவரை நடத்தப்படும் ரெஸ்டோ பார்களை இரவு பத்து மணியுடன் மூட தாங்கள் உத்தரவு இட வேண்டும். இந்த ரெஸ்டோ பார்களுக்கு வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களால் தம் மாநிலத்தில் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தப்படுகின்றது. கலால் துறையில் ரெஸ்டோ பார் என்று லைசன்ஸ் கிடையாது. சுற்றுலா லைசன்ஸை பெற்றுக் கொண்டு இரவு வரை இளம் பெண்களும், இலைஞர்களும் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவதற்கு எந்த அரசு துறையும் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, நகராட்சிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களின் வாய்மொழி அனுமதியோடு இந்த அவலங்கள் புதுச்சேரியில் நடத்தப்படுகின்றது. போதை விற்பனைக்கு இதுபோன்ற ரெஸ்டோ பார்கள் முக்கிய இடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் போதைப் பொருளுடன் காவல் துறையின் போதை தடுப்பு போலிஸ், எஸ்டிஎப் உள்ளிட்ட காவலர்களால் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட இடத்தின் வரையறைக்குள் உள்ள காவல் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் அந்த காவல்துறையின் கிரைம் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கையை டிஜிபி, எஸ்எஸ்பி, அவர்கள் எடுக்க வேண்டும்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர்சாதிக் என்பவருடன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல் வாதிகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறன. இது சம்பந்தமாக தாங்களும் இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறதா என தெரியவில்லை.
புதுச்சேரி காவல் துறை போதை தடுப்பு விற்பனை மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் மத்திய போதை பொருள் தடுப்பு (Narcotics Control Bureau ) பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்யப்படுபவர்கள் மீது PIT NDPS Act 1988 சட்டத்தின்படி உரிய நடவடிக்கை நீதி மன்றங்கள் எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் போதைப்
பொருள் விற்பனையை தடுக்க தனியாக மூன்று, நான்கு நேர்மையான காவலர்களை
நியமனம் செய்ய வேண்டும்.போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதை காவல்
துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும் தகவல்களின் அடிப்படையில் போதைப் பொருள் பிடிக்கப்பட்டால் தகவல் தெரிவித்தவர்களுக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு அரசின் வெகுமதியை அளித்தால் போதை விற்பனை செய்யப்படுபவர்கள் நிச்சயமாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் உபயோகிப்பது சம்பந்தமாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் அனைத்து விதமான கல்லூரிகள், அரசு மற்றும் தனியார். மருத்துவக் கல்லூரிகளில் கட்டாயமாக புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். போதைப் பொருள் உபயோக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் கொம்யூன் வாரியாக மறு வாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தும் இந்த பிரச்சனையில் சமூக நலத்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை. இதுபோன்ற மறுவாழ்வு மையத்தில் மருத்துவ முதுநிலை கல்வி பயிலும் மனநல மருத்துவர்களைக் கொண்டு மறு வாழ்வு மையங்களில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நலனுக்காக அமைக்கப்படும் மறுவாழ்வு மையங்களுக்கு போதை உபயோகிப்பவரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மரணமடைந்த சிறுமி ஆர்த்தியின் பெயரோடு ஆர்த்தி போதைப் பொருள் தடுப்பு மறுவாழ்வு மையம் என பெயர் வைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் விற்பனைத் தடுப்பு மற்றும் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செய்யவேண்டிய நிவாரண பணிகள் உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து மத்திய அரசின் சமூக நலத்துறையின் மூலம் 1988-ல் கொண்டுவரப்பட்ட Drig De-addiction programme (DDAP) ஆணைகளை புதுச்சேரி அரசு போர் கால அடிப்படையில் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று மேதகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
இந்நிகழ்ச்சியின் போது மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர்கள் உடனிருந்தனர். மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாகGanja, Ganja Oil, Ganja Green, OG (Costly Ganja), LSD (Stamp) Meth(Crystal), Meth (Powder), MDMA(Ecstacy/Molly), Heroin (Powder), Cocaine(Coke/Crack) Ketamine உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற போதைப் பொருட்கள் குறிப்பாக பப், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, தங்குதடையின்றி போதைப் பொருள் விற்பனையால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது நிகழ்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு குறைந்த காலத்திலேயே அதிகப்படியான வருமான பணத்தை பெறுவதால் அவர்கள் காவல்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் தங்களது செல்வாக்கை குறுக்கு வழியில் பெறும் பணத்தின் மூலம் பயன்படுத்துகின்றனர். புதுச்சேரி காவல் துறையால் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், புதுச்சேரி மாநிலம் என்பது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கேந்திரமாக மாறி
உள்ளது.
மேற்கூறிய பல்வேறு போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் புதுச்சேரி அல்ல. இந்நிலையில் இவர்களுக்கு எங்கிருந்து இது போன்ற போதைப் பொருட்கள் வருகின்றது என காவல் துறை விசாரணை செய்வதில்லை. போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இணைந்து விற்பனை செய்கின்றனர். தெருவெல்லாம் கஞ்சா பொட்டலங்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றது. கஞ்சா விற்பனையை தடுக்கக் கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சுற்றுலா என்ற பெயரில் பெண்கள் சம்பந்தமாக கலாச்சார சீரழிவு நடந்து வருகின்றது. தெருவெங்கும் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, இரவு மூன்று மணிவரை அருவருக்கத்தக்க நடனங்கள் நடத்தப்படுகின்றது, புதுச்சேரியை ஆளும் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அரசாக இல்லை. தினசரி ஏதோ அரசு நிர்வாகம் நடக்கின்றது என்ற நிலையில் ஆட்சியாளர்களின் செயல்பாடு இருக்கின்றது.
புதுச்சேரியில் சமூக, சமுதாய சீரழிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு இவற்றில் அரசு உரிய கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நிடித்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மாநிலமாக மாறும்.
கடந்த வாரம் போதைப்பொருள் உபயோகிக்கும் நபர்களால் அட்டவணை இனத்தை சேர்ந்த ஒன்பது வயது ஆர்த்தி என்ற சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நெஞ்சை பதறவைக்கும் செயலாகும். இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை இச்செயல் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்விற்கு பிறகும் ஆளும் அரசு போதைப் பொருட்கள் தடுப்பு விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தாங்கள் அரசுக்கு துணை நிலை ஆளுநர் என்ற அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவுகளை அமுல்படுத்தாமலும், அலட்சியத்துடனும் செயல்படும் எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கையை உடனடியாக தாங்கள் எடுக்க வேண்டும்.
இரவு இரண்டு, மூன்று மணிவரை நடத்தப்படும் ரெஸ்டோ பார்களை இரவு பத்து மணியுடன் மூட தாங்கள் உத்தரவு இட வேண்டும். இந்த ரெஸ்டோ பார்களுக்கு வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களால் தம் மாநிலத்தில் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தப்படுகின்றது. கலால் துறையில் ரெஸ்டோ பார் என்று லைசன்ஸ் கிடையாது. சுற்றுலா லைசன்ஸை பெற்றுக் கொண்டு இரவு வரை இளம் பெண்களும், இலைஞர்களும் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவதற்கு எந்த அரசு துறையும் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, நகராட்சிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களின் வாய்மொழி அனுமதியோடு இந்த அவலங்கள் புதுச்சேரியில் நடத்தப்படுகின்றது. போதை விற்பனைக்கு இதுபோன்ற ரெஸ்டோ பார்கள் முக்கிய இடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் போதைப் பொருளுடன் காவல் துறையின் போதை தடுப்பு போலிஸ், எஸ்டிஎப் உள்ளிட்ட காவலர்களால் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட இடத்தின் வரையறைக்குள் உள்ள காவல் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் அந்த காவல்துறையின் கிரைம் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கையை டிஜிபி, எஸ்எஸ்பி, அவர்கள் எடுக்க வேண்டும்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர்சாதிக் என்பவருடன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல் வாதிகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறன. இது சம்பந்தமாக தாங்களும் இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறதா என தெரியவில்லை.
புதுச்சேரி காவல் துறை போதை தடுப்பு விற்பனை மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் மத்திய போதை பொருள் தடுப்பு (Narcotics Control Bureau ) பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்யப்படுபவர்கள் மீது PIT NDPS Act 1988 சட்டத்தின்படி உரிய நடவடிக்கை நீதி மன்றங்கள் எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் போதைப்
பொருள் விற்பனையை தடுக்க தனியாக மூன்று, நான்கு நேர்மையான காவலர்களை
நியமனம் செய்ய வேண்டும்.போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதை காவல்
துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும் தகவல்களின் அடிப்படையில் போதைப் பொருள் பிடிக்கப்பட்டால் தகவல் தெரிவித்தவர்களுக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு அரசின் வெகுமதியை அளித்தால் போதை விற்பனை செய்யப்படுபவர்கள் நிச்சயமாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் உபயோகிப்பது சம்பந்தமாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் அனைத்து விதமான கல்லூரிகள், அரசு மற்றும் தனியார். மருத்துவக் கல்லூரிகளில் கட்டாயமாக புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். போதைப் பொருள் உபயோக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் கொம்யூன் வாரியாக மறு வாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தும் இந்த பிரச்சனையில் சமூக நலத்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை. இதுபோன்ற மறுவாழ்வு மையத்தில் மருத்துவ முதுநிலை கல்வி பயிலும் மனநல மருத்துவர்களைக் கொண்டு மறு வாழ்வு மையங்களில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நலனுக்காக அமைக்கப்படும் மறுவாழ்வு மையங்களுக்கு போதை உபயோகிப்பவரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மரணமடைந்த சிறுமி ஆர்த்தியின் பெயரோடு ஆர்த்தி போதைப் பொருள் தடுப்பு மறுவாழ்வு மையம் என பெயர் வைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் விற்பனைத் தடுப்பு மற்றும் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செய்யவேண்டிய நிவாரண பணிகள் உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து மத்திய அரசின் சமூக நலத்துறையின் மூலம் 1988-ல் கொண்டுவரப்பட்ட Drig De-addiction programme (DDAP) ஆணைகளை புதுச்சேரி அரசு போர் கால அடிப்படையில் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக